‘மெர்சல்’ படத்தை முன்வைத்து சில கருத்துகள்

அச்சம் வேண்டாம். இது ‘மெர்சல்’ விமர்சனம் அல்ல. அப்படத்தை முன்வைத்து சில கருத்துகள் மட்டுமே.
1. எந்த மொழி படத்தில் இருந்தும் கதைக் கருவையோ, காட்சிகளையோ காப்பி அடிப்பதோ அல்லது இன்ஸ்பையர் ஆவதோ தவறில்லை. ஆனால், கட்டடத்தை விட்டுவிட்டு சாரத்தை மட்டுமே கட்டடம் என்று எடுத்துக் கொள்வதோ நினைப்பதோ தவறு.
இயக்குநர் அட்லியும் சரி... திரைக்கதை, வசனத்தில் உடன் பங்காற்றும் (விஜய் டிவி சீரியல் புகழ்) ரமணகிரிவாசனும் சரி... தொடர்ந்து இந்தத் தவறைதான் செய்கிறார்கள். ‘தெறி’யும், ‘மெர்ச’லும் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.

திணைகளின் பெருவெளி!

மிகையில்லை. எந்நேரமும் வியப்பதுதிணைக் கோட்பாட்டைவடிவமைத்த முன்னோர்கள் குறித்துதான். உலகில் வேறெந்த மொழியிலும் இல்லாத அதிசயம் இது.
மனிதர்களின் வாழ்க்கையை, வாழ்வியலை, அவர்களது உணவை, பொருளாதார இயக்கத்தை, அது சார்ந்த மொழி கட்டமைப்பை, உடையை, கலையை... இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் உள்ளடக்கியதுதிணைமட்டுமே.
மறுக்கவில்லை. பல காலகட்டங்களைக் கடந்து இன்று நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)

வாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சூழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இருக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது.
இதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம்  நீண்ட நேரம் உரையாடியிருக்கிறார். இந்த சந்திப்பு(கள்) குறித்து இங்கு அவசியமில்லை.  ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.

சிமொன் தெ பொவ்வார் - The Nature of Second Sex - ஓர் அறிமுகம்


தவறுதான் இல்லையா?

ஒரு நூலை வாசிக்காமலேயே அந்நூல் குறித்த அறிமுகத்தை எழுத வந்திருக்கிறேன். அறியாமலேயே சிலர் மீது அதிகமான ஈடுபாடு வரும். எனக்கு சிமொன் தெ பொவ்வார் மீது. அதனாலேயே அவர் எழுதிய, இன்னமும் முழுமையாக வாசிக்காத, The Nature of Second Sex (LeDeuxieme Sexe ) நூல், இந்த இடுகைக்கான பொருளாகிறது.

சிமொன் தெ பொவ்வார் மீது ஈர்ப்பு வர என்ன காரணம்?

அவருக்கும் இருத்தலியல் தத்துவவாதியான சார்த்தருக்கும் இடையில் இருந்த காதலா அல்லது சார்த்தரின் உடனிருப்பு அன்பில் நனைந்தபடியே அமெரிக்காவில் வசித்த நெல்ஸன் அல்கிரெனின் தொலைதூரக் காதலிலும் குளித்ததா அல்லது அறிவு வீச்சுடன் மார்க்ஸ், எங்கல்ஸ், பிராய்ட், கிறிஸ்துவ ஆதித்தோற்றக் கதை, பிரபல இலக்கியவாதிகளின் பெண்வெறுப்புக் கருத்தியல் ஆகியவற்றையெல்லாம் தயங்காமல் பதிவு செய்ததா அல்லது தனது 37வது வயதில்

'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்


தி.ஜானகிராமனின் 'குளிர்' சிறுகதை எந்த இதழில் பிரசுரமானது தெரியுமா? 'காதல்' பத்திரிகையில்! யெஸ், பத்திரிகையின் பெயரே 'காதல்'தான். மட்டுமல்ல கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி, மு.வரதராசனார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், வல்லிக்கண்ணன், அகிலன், மாயாவி... என பல பிரபலங்கள் இந்த மாத இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்கள்.

வியப்பாக இருக்கிறது. இப்படியொரு பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த இந்த 2017லும் பலரும் யோசிக்கிறோம். அப்படியிருக்க 1947ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தப் பத்திரிகை பிறந்திருக்கிறது - அதுவும் தமிழில் - என்றால் எப்படி பிரமிப்படையாமல் இருக்க முடியும்?

முதல் இதழில் 'காதல்' பத்திரிகையின் அவசியம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை பாருங்கள்:

Dummies for சார்த்தர்

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சார்த்தரின் தத்துவங்கள் காலாவதியாகிவிட்டன... என உரையாடல் நிகழ்ந்து வரும் நேரத்தில் அவரைப் பற்றி ஒரு பதிவு. தெரிதாவும், ஃபூக்கோவும் சார்த்தரின் தத்துவங்களை காயவைத்து, பிழிந்து, கொடியில் உலர்த்தி விட்டதாக கருதப்படும் சூழலில் சார்த்தரை குறித்து ஓர் அறிமுகம்.


இத்தனைக்கும் ஃபூக்கோவை கற்க முயற்சித்து வரும் ப்ரி.கே.ஜி. மாணவன். '20ம் நூற்றாண்டைக் கற்பனை செய்து பார்க்கும் 19ம் நூற்றாண்டு மனிதனால் எழுதப்பட்டது' என சார்த்தர் எழுதிய Critique of Dilaectical Reason (இயங்கியல் அறிவு பற்றிய விமர்சனம்) நூலை குறித்து ஃபூக்கோ சொல்லியிருப்பதை எழுத்துக் கூட்டி படித்திருப்பவன். இதே வாசகங்களை காரல் மார்க்ஸ் குறித்தும் ( எப்படி மீன் தண்ணீரில் வாழும் உயிரினமோ அப்படி மார்க்ஸ் 19ம் நூற்றாண்டு உயிரினம்! - அதாவது 19ம் நூற்றாண்டுக்குப் பின் காரல் மார்க்ஸின் தத்துவம் மறைந்துவிட்டது என்ற பொருளில்) அவர் நக்கலடித்திருப்பதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியாமல் திகைத்து நிற்பவன்.

என்றபோதும் சார்த்தர் குறித்து ஒரு பதிவு எழுத வந்திருக்கிறேன்.